வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் 10 முக்கிய காரணிகள்.. கொஞ்சம் என்னனு பாருங்க!

கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையானது ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகிறது. எப்படியிருப்பினும் கடந்த வார இறுதியில் ஏற்றத்திலேயே முடிவடைந்தது. தொடர்ச்சியாக 2வது வாரமாக சந்தையானது ஏற்றத்தினை காண வழிவகுத்துள்ளது.

இது சந்தையில் ஷார்ட் கவரிங் காரணமாக சந்தையானது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

நிஃப்டி மிட் கேப் குறியீடானது 1% கீழாக முடிவடைந்துள்ளது. இதே வங்கி சார்ந்த குறியீடானது 3.3% இந்த வாரத்தில் ஏற்றம் கண்டுள்ளது.இதே நிஃப்டி மெட்டல்ஸ் குறியீடானது 9% கீழாக சரிவினைக் கண்டுள்ளது.

வருமானம்

வருமானம்

இதற்கிடையில் வரும் வாரத்தில் 10 காரணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.

வரும் வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளது. குறிப்பாக சன் பார்மா, எல்ஐசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நியூரோகா, ஈக்விட்டீஸ் ஹோல்டிங்ஸ், டிடிகே பிரிடீஸ், விகாஸ் ஈகோ டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.

பட்டியல்

பட்டியல்

வரும் வாரத்தில் 3 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் Aether, eMudhra மற்றும் Ethos உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
Ethos மே 30 அன்று பட்டியலிடப்படவுள்ளன. இதே இ-முத்ரா நிறுவனம் ஜூன் 1 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே Aether நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று பங்கினை பட்டியலிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அன்னிய முதலீடுகள்
 

அன்னிய முதலீடுகள்

மே மாதத்தில் இதுவரையில் 44,346 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். கடந்த 8 மாதங்களில் 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்.

உள்நாட்டு முதலீட்டாளர்கள்

உள்நாட்டு முதலீட்டாளர்கள்

உள்நாட்டு முதலீட்டாளர்கள் மே மாதத்தில் இதுவரையில் 47,465 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். இதன் காரணமாக சந்தையானது பெரியளவில் சரியாமல் உள்ளது.

குளோபல் தரவுகள்

குளோபல் தரவுகள்

வரும் வாரத்தில் வரவிருக்கும் சர்வதேச முக்கிய தரவுகள் சந்தையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக வேலை குறித்தான தரவுகள், சீனாவின் உற்பத்தி குறித்தான தரவுகள், பொருளாதாரம் குறித்தான தரவுகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய்

ரூபாய்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 77 ரூபாய்க்கு மேலாகவே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு வாரத்தில் 77.59 ரூபாயாக முடிவடைந்திருந்தாலும், வரும் வாரத்தில் ரேஞ்ச் பவுண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட் முடிவுகள்

கார்ப்பரேட் முடிவுகள்

வரும் வாரத்தில் முக்கிய கார்ப்பரேட் முடிவுகள் வெளியாகவுள்ளன. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஆனது புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இது சந்தையானது மேற்கொண்டு ஏற்றம் காண வழிவகுக்கலாம். இது தொடர்ந்து 16,250 லெவலுக்கு மேலாக வர்த்தகமாகினால், 16,442 மற்றும் 16,666 என்ற லெவல் வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சப்போர்ட் லெவலாக 16,161 மற்றும் 16,061 வரையில் செல்லலாம்.

இந்தியாவின் ஜிடிபி தரவு

இந்தியாவின் ஜிடிபி தரவு

இந்தியாவின் மார்ச் காலாண்டு குறித்தான தரவானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராய்டர்ஸ் கணிப்பின் படி, தொடர்ந்து 3வது காலாண்டாக மெதுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாட்டில் விலைவாசி அதிகரிப்பின் காரணமாக தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

10 factors that will determine the market in the coming week

The Indian market has been volatile for the past few weeks. What are the 10 factors that will determine the market in the coming week in this situation?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.