ஜூன் முதல் வாரத்தில் 4 நாள் பணி.. ஊழியர்கள் கொண்டாட்டம்..ஆனால் இது டிரையல் தான்!

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். வாரத்தில் 3 நாள் விடுமுறை என்றால் என்ன சொல்லவா? வேண்டும். ஏற்கனவே இதனை சில நாடுகள் யோசனை செய்து வருகின்றன. சில நாடுகள் சோதனையாக அமல்படுத்தி பார்த்துவிட்டன.

பல நாடுகளிலும் இது இதனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.

தற்போது இங்கிலாந்து நாட்டிலும் ஜூன் முதல் வாரத்தில் 4 நாள் வேலை என்ற சோதனையை அந்த நாடு தொடங்கவுள்ளது.

மிக்ப்பெரிய வெற்றி

இந்த திட்டமானது சம்பளத்தினை குறைக்காமல் முழு நேரமாக பணிபுரிய திட்டமிடப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் இந்த சோதனையானது வெற்றி பெற்றுள்ள நிலையில், இது நிரந்தரமாக அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளர்து. குறிப்பாக ஐஸ்லாந்தில் இந்த திட்டம் குறித்தான சோதனையானது மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம்

ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம்

இந்த நிலையில் இந்த சோதனையில் வெற்றி கண்டால் இங்கிலாந்திலும் இந்த திட்டமானது அமல்படுத்தப்படலாம். இதன் மூலம் ஊழியர்களுக்கு அழுத்தம் குறையலாம். இது நிறுவனங்களுக்கு உற்பத்தி திறனை மேம்படுத்தும்.

எனினும் இந்த திட்டத்தின் மூலம் தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் வாரத்திற்கு 48 மணி நேரம் ஊழியர்களுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கும்.

 எத்தனை பேர்?
 

எத்தனை பேர்?

இங்கிலாந்தின் இந்தசோதனையில் 60 நிறுவனகளை சேர்ந்த 3,000 ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் நிறுவனங்கள் வேலை நேரத்தினை குறைக்காமல், சம்பளத்தினையும் குறைக்காமல் ஊழியர்களுக்கு உதவும் விதமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

பல நாடுகள் சோதனை

பல நாடுகள் சோதனை

இதேபோன்ற சோதனைகள் ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நடந்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் தொடங்கவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சிறிய நிறுவனங்கள் எளிதில் பெரிய மாற்றங்கள் கிடைக்கும். ஆக அவர்கள் எளிதில் இதனை ஏற்றுக் கொள்ளலாம்.

நல்ல விஷயம் தான்

நல்ல விஷயம் தான்

இங்கிலாந்தில் நிறுவனங்கள் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. இந்த நேரத்தில் இங்கிலாந்தின் இந்த திட்டம் ஊழியர்களை நிறுவனத்தினை விட்டு வெளியேறாமல் தடுக்கும். இதன் மூலம் ஊழியர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK companies will be testing the work plan 4 days a week

The UK plans to test out a plan to work 4 days a week from June

Story first published: Sunday, May 29, 2022, 23:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.