உக்ரைன் ராணுவத்திற்கு நிதி உதவிகள் வழங்கப்படுவதற்கு முன்னதாக, நமது நாட்டின் பள்ளிகளின் பாதுகாப்பிற்கான நிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தை அடுத்து, நாட்டின் துப்பாக்கி கலசாரத்தில் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கண்டன குரல்கள் அதிகரிக்க தொடங்கின.
இந்தநிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய துப்பாக்கி குழுவான தேசிய துப்பாக்கி சங்கத்தின் (NRA)மாநாடு ஹூஸ்டனில் நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் நாட்டிற்கு 40 பில்லியன் ராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்காவிற்கு, தங்களது சொந்த நாட்டில் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பை எப்படி உறுதிபடுத்த முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் உலகின் பிற பகுதிகளை அமெரிக்கா கட்டி எழுப்புவதற்கு முன், நமது சொந்த நாட்டின் குழந்தைகளுக்கு தேவையான பள்ளி பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என என்று பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.
மேலும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட கோவிட் நிவாரண நிதியில் பயன்படுத்தப்படாத நிதியை அரசு திரும்ப பெற்று, உடனடியாக அந்த நிதியில் நமது நிலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஊடுருவ முடியாத பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரில் முதல்முறையாக…ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செய்த காரியம்!
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் துப்பாக்கிகள் கலாச்சாரத்தின் மீதான இறுக்கமான கட்டுபாடு வேண்டும் என்ற அழைப்புகளையும் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார்.
அமெரிக்காவின் ஒழுக்கமானவர்களுக்கு எதிரான தாக்குதலைகளை எதிர்கொள்ள துப்பாக்கிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.