பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுமி ஆயிஷா பாத்திமாவின் மரணம் தொடர்பான சந்தேகத்தின் கீழ் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிக்கை
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கோவிட் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாக அவர் கூறினார்.
குற்றப்புலனாய்வு துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிபரின் கீழ் செயல்படும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சிறுமியின் மரணம் பற்றிய பின்னணி
நேற்று முன்தினம்(27) காலை வீட்டில் இருந்து கோழியிறைச்சி வாங்குவதற்காக வியாபாரத்தளத்துக்கு சென்ற ஆயிஷா பாத்திமா எனும் 9 வயது சிறுமி காணாமல் போனதாக முறையிடப்பட்டது.
இந்த நிலையில், பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் சடலம் நேற்று(28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல் |
சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! பெற்றோருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி |
பண்டாரகம சிறுமியின் மரணம்! தொடர்ந்தும் உண்மையை கண்டறியும் முயற்சிகள் (Video) |
சடலமாக மீட்கப்பட்ட அட்டுலுகம சிறுமி விவகாரம்! நாமல் வெளியிட்டுள்ள நம்பிக்கை |