அமெரிக்காவில் கடைக்குள் நின்று பேசியவர்கள் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்த கார்! வைரலாகும் வீடியோ



அமெரிக்காவின் டெம்பேயில் கடைக்குள் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஒன்று, மின்னல் வேகத்தில் வந்து மோதிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று, டெம்பே நகரில் உள்ள சில்லறை விற்பனை கடையில் ஊழியர்கள் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் வந்த கார், கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்துக் கொண்டு அவர்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் காரை ஒட்டிய நபர் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக, கவனக்குறைவில் ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஊழியர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.