புதுடெல்லி: தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. இதனால், பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் முறையே மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக உபி.யில் 6 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.