ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ சுற்றறிக்கை!

அனைத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை செய்து தர வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது ஒரு சில வங்கிகள் மட்டுமே ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் எடுக்கும் வசதியை செய்துள்ள நிலையில், இனி அனைத்து வங்கிகளும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

ஸ்கிம்மிங், குளோனிங் உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்து வரும் நிலையில் இதனைத் தவிர்ப்பதற்காகவே கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அனைத்து வங்கிகளும் செயல்படுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

 ஏடிஎம் கார்டு இன்றி பணம்

ஏடிஎம் கார்டு இன்றி பணம்

கார்டு இல்லாமல் UPI ஐடி மூலம் பணம் எடுக்கும் வசதி கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கார்டு இல்லாமல் மொபைல் போன் மூலமே பணம் எடுக்கும் வசதியை பொதுமக்கள் பெற்றனர். ஏடிஎம் மெஷினில் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது ஸ்கிம்மிங் போன்ற மோசடிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

UPI பரிவர்த்தனை

UPI பரிவர்த்தனை

மேலும் கார்டு இல்லாமல் பணபரிவர்த்தனையை UPI மூலம் பயன்படுத்துவதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது என்றும், எந்தவித முறைகேடும் இதில் செய்ய வாய்ப்பில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி செயலி
 

வங்கி செயலி

இந்த புதிய வசதியால் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மொபைல்போனில் வங்கியின் செயலியை ஓபன் செய்து அதன் மூலம் மிக எளிதாக UPI ஐடியை பின்கோடு, ஓடிபி எண்களை பதிவு செய்தால் தேவையான பணத்தை வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

இந்த வசதி தற்போது ஐசிஐசிஐ உள்பட ஒரு சில வங்கிகளில் இருந்தாலும் இன்னும் பல வங்கிகள் இந்த வசதியை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்து தரவில்லை. மேலும் இந்த வசதியை தந்து கொண்டிருக்கும் சில வங்கிகள் பரிவர்த்தனைக்கு வரம்பு வைத்துள்ளது என்பதும், அதுமட்டுமின்றி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை வங்கி விதித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் அனைத்து வங்கிகளும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ICCW வசதியை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI Asks Banks To Provide Cardless Cash Withdrawal Facility At ATMs

RBI Asks Banks To Provide Cardless Cash Withdrawal Facility At ATMs |ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ சுற்றறிக்கை!

Story first published: Monday, May 30, 2022, 7:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.