பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்றதால், ஷேன் வார்னே பெருமையுடன் தங்களை பார்க்கிறார் என ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்த குவாலிபையர் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக சதம் விளாசி, தமது அணியை வெற்றி பெற வைத்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய பட்லர் மறைந்த முன்னாள் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்தார்.
Photo Credit: BCCI/IPL
அவர் வார்னே குறித்து பேசும்போது, ‘ஷேன் வார்னேவை பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் செல்வாக்கு மிக்கவர். முதல் சீசனில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றவர். நாங்கள் அவரை தவறவிடுகிறோம். ஆனால் இன்று அவர் எங்களை பெருமையுடன் பார்க்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களை நம்ப வைத்தார்’ என உருக்கத்துடன் தெரிவித்தார்.
Photo Credit: IANS
அகமதாபாத் மைதானத்தில் குழுமியிருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் இடையில், வார்னேயின் மிகப்பெரிய போஸ்டர்களை பலர் பெருமையுடன் வைத்துக் கொண்டு அவரை நினைவு கூர்ந்தனர்.
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் அணிக்கு பெற்றுத் தந்த ஷேன் வார்னே, கடந்த மார்ச் மாதம் தனது 52வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
Photo Credit: Reuters