மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளது. இங்கு பணியாற்றும் 4500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 1500 பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோக பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு சங்கம் என மூன்று சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சிறந்த பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை வழங்க வேண்டும். கொரோனா நிவாரணத்தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மேலவாசல் உள்ள பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் போராட்டத்தில், விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகள் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.