நாட்டில் தற்போதுள்ள நிலையில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம்,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த போகத்தில் 55 சதவீத நெற்பயிர்களே அறுவடை செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கடும் உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.
நாங்கள் எரிமலையின் மீது இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஒரு மரவள்ளி குச்சியைக் கூட தூக்கி எறிய கூடாது என்று நினைக்கிறேன்.
வத்தாளை கிழங்கின் ஒரு தண்டு கூட அழுகாமல் ஏதாவது ஒரு இடத்தில் வளர்த்து வந்தால் சிறிது காலத்திலேனும் அதனை உட்கொள்ள பயன்படுத்திக் கொளள் முடியும். இதுதான் நாம் எதிர்கொள்ளும் உண்மை நிலை.
தற்போது நெருக்கடியான நிலையில் வணக்க ஸ்தலங்களில் பூஜை நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, உணவுக்காக ஏதேனும் தாவரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் அரச நிறுவனங்களிலும் முடிந்தவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிடைக்கும் இடங்களில் விவசாயம் செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.