மாநிலங்களவை எம்.பி ஆக எனக்கு தகுதி இல்லையா? நடிகை நக்மா கேள்வி

மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கப்படடாதது குறித்து நடிகையும் மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மே 29) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில். தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். கர்நாடகத்தின் ஜெய்ராம் ரமேஷ்,  ராஜஸ்தான் மாநிலத்தின் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக். பிரமோத் திவாரி, மத்திய பிரதேசத்தின் விவேக் தன்கா, சத்திஸ்கர் மாநிலத்தின் ராஜீ சுக்லா. ரஞ்சித் ரஞ்சன். ஹாரியாணா மாநிலத்தின் அஜய் மாக்கன். மகாராஷ்டிராவின் இம்ரான் பிரதாப்கரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றுள்ள ப.சிதம்பரம் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆனாலும் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தான் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பெயர் தமிழகத்தின் சார்பில் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிட தனக்கு ஏன் வாய்ப்பளிக்கபடவில்லை தனக்கு அந்த தகுதி இல்லையா என்று நடிகையும். மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான நக்மா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

நான் கடந்த 2003-04 ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என தலைவர் சோனியாக காந்தி உறுதி அளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் 18 வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.