பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா


இந்தியாவை சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்றது கனடாவை சேர்ந்த தாதா என தெரியவந்துள்ளது.

இரண்டு கும்பல்கள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறும் பொலிசார் கனடாவை தளமாகக் கொண்ட குண்டர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் பாடகரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மான்ஸா நகரில் தனது வாகனத்தில் அவர் வந்த போது, மர்ம நபர்கள் அவரது வாகனத்தின் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த 26ம் திகதி ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்றது.
இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா

இது அரசியல் படுகொலை என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மூஸ்வாலா ஆம்ஆத்மி அரசை தனது பாடலில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த கொலை தொடர்பாக பஞ்சாப் டிஜிபி விகே பவுரா கூறுகையில், லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது.

அந்த குழுவை சேர்ந்த லக்கி என்பவர் கனடாவில் இருக்கும் நிலையில் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார்.
இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல கிரிமினில் வழக்குகள் உள்ளன.

2 பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்தும் பாடகர் பாதுகாவலர் இல்லாமல் சென்றுள்ளார். அவர் தனது புல்லட்புரூப் காரையும் பயன்படுத்தாமல் மாற்று காரில் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே சித்து தனது பாடல்கள் மூலம் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஏ.கே 47 ரக துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகவும் அவர் வழக்குகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.