எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்


நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் வரவு சுமார் 75 சதவீதமாக குறைவடைந்திருந்ததாகவும், கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட  குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வு 

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்

தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

எதிர்காலத்தில் பாரிய அளவில் இவற்றின் விலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

எரிபொருள்  விலையேற்றம் 

எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக தற்போது மோட்டார் சைக்கிள், லொறி போன்றவற்றில் துவிச்சக்கர வண்டிகளில் மரக்கறிகளை ஏற்றிச் செல்வதாகவும், எண்ணெய் நெருக்கடி காரணமாக வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாக்கு மூட்டைகளில் அடைத்து விற்கப்பட்ட காய்கறிகள் தற்போது பொலித்தீன் பைகளிலும் விற்கப்படுவதைக் காணலாம்.

விவசாயிகளுக்கு எரிபொருள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்படாததால் விவசாயம் பொய்த்துவிட்டதாகவும், இதனால் விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான நெருக்கடியில் எதிர்காலத்தில் பொருளாதார வர்த்தக நிலையங்களை மூடுவது சாத்தியமாகும் என வர்த்தகர்கள் வலியுறுத்துகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.