
விபத்தில் உயிரிழந்த ரசிகருக்கு சூர்யா நேரில் கண்ணீர் அஞ்சலி
நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். நாமக்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றத்திற்காக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதீஷ் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தர். அவருக்கு வயது 25.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யா ஜெகதீஷின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்த சூர்யா, ஜெகதீஷின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார்.