நீங்கள் பார்ப்பது முதலையா? தீவா? இந்த படம் உங்க ஆளுமை பற்றி என்ன சொல்லுது பாருங்க!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றி நிறைய கூறுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் அடிப்படையிலான ஆளுமை சோதனை உங்களைப் பர்றி உங்களுக்கு தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த படத்தைப் பாருங்க, நீங்கள் பெரிய சிந்தனையாளரா, மக்களுக்காக போராடக் கூடியவரா அல்லது வணிக படைப்பாளியா என்று கண்டுபிடியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், நாம் பார்க்கும் விதத்தை, சிந்திக்கும் விதத்தை மறு பரிசீலனை செய்ய சவால் விடுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் மூளை எப்படி செயல்படுகிறது என்பதற்கான குறிப்புகளை அளிக்கிறது. மேலும், உங்கள் ஆளுமையையும் வாழ்க்கையை நிர்வகிக்கும் மேலாதிக்க பண்புகளையும் ஒரு நிமிடத்திற்குள் தீர்மானித்து கூறுகின்றன.

இந்த படம் வித்தியாசமானது அல்ல என்றாலும், நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மனதை மருளச் செய்யும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் பார்க்கும் முதல் விஷயம், நீங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த படம் நீங்கள் முதல் பார்வையில் என்ன பார்க்கிறீர்களோ அதை வைத்து நீங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

உளவியலாளர் டாக்டர் ரெபெக்கா ஸ்பெல்மேன், ஃபண்டிங் சர்க்கிள் நிறுவனத்துடன் இணைந்து, இந்த படத்தை கணினியில் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் பார்க்கும் நபரைப் பற்றி நிறைய வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஸ்பெல்மேன் கூறுகையில், மனிதர்களை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: பெரிய சிந்தனையாளர், மக்களை நோக்கி செல்பவர், அல்லது வணிகப் படைப்பாளி என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

கீழே உள்ள படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

நீங்கள் முதலில் முதலையைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் வணிக கிரியேட்டிவ் பிரிவில் வருகிறீர்கள் என்று அர்த்தம். இந்த வகையான நபர்களுக்கு பொதுவாக சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் சாமர்த்தியம் இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், கடலின் நடுவில் தீவை மட்டுமே பார்ப்பவர்கள் நல்ல தலைமைத்துவ திறன்கள் மற்றும் மக்களைக் கவரும் வழியைக் கண்டுபிடிக்கும் இயல்பான தன்மை கொண்டவர் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால், நீங்கள் முதலையையும் தீவையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவர்களாக இருந்தால், நீங்கள் ஒரு பெரிய சிந்தனையாளர், நீங்கள் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த படம் குறிப்பிடுவது போல, பெரிய விவகாரங்களைப் பற்றிய உங்கள் பார்வையை இழக்க மாட்டீர்கள். உங்கள் உள்ளுணர்வால் மட்டுமே அந்த பார்வையைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.