இனி இந்தியாவுக்கு யோகம் தான்.. அமெரிக்க நிறுவனங்கள் படையெடுப்பு..!

அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்புகள் பெரிய அளவில் குறைந்திருந்தாலும் இரு நாடுகள் மத்தியிலான போட்டி தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா தலைமையில் இந்தியா உட்பட 13 நாடுகள் சீனா-வின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

இந்நிலையில் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள்

சீனாவையும், சீன நிறுவனங்களையும் நம்பியிருக்கும் நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காகக் கோல்மேன் சாச்சஸ் முதல் ஐபிஎம், DHL, ப்ரூக்பீல்டு போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் இந்தியாவில் புதிதாக முதலீடு செய்யவும், ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதில் சில செமிகண்டக்டர் நிறுவனங்களும் அடக்கம் என்பது கவனிக்க வேண்டியவை.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கடந்த வாரம் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவன அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கும் போது இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 3 மடங்கு அல்லது குறைந்தபட்சம் 2 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்தனர். கோல்மேன் சாச்சஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அதிகப்படியான ஊழியர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பியூஷ் கோயல்
 

பியூஷ் கோயல்

இதேபோல் DHL நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இரண்டு பெரிய லாஜிஸ்டிக்ஸ் தளத்தைத் திறந்து தனது சேவை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. இதேபோல் ஐபிஎம், ப்ரூக்பீல்டு முதல் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வரையில் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் புதிய முதலீட்டைச் செய்யவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் விருப்பும் தெரிவித்துள்ளதாக டாவோஸ் உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

PLI திட்டம்

PLI திட்டம்

இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு ஏற்கனவே 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான PLI திட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வருகிறது மத்திய அரசு. இதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

அனைத்திற்கும் மேலாக வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகைச் செய்யும். இதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையச் செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

American companies plans to ramp up India operation and investment in next 2-3 years

American companies plans to ramp up India operation and investment in next 2-3 years இனி இந்தியாவுக்கு யோகம் தான்.. அமெரிக்க நிறுவனங்கள் படையெடுப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.