திருச்சி:
சென்னையில் கடந்த 28-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில வருகிற ஜூன் 3-ந்தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.