சுந்தர ராமசாமி :
நவீன தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது ஆரம்பகாலக் கதைகள் சாந்தி என்ற இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய செம்மீன் நாவலையும் மொழிபெயர்த்தார்.
இவர் பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1988ஆம் ஆண்டு காலச்சுவடு என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட சுந்தர ராமசாமி 2005ஆம் ஆண்டு மறைந்தார்.