பாஜக ஆதரவு யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது – அண்ணாமலை,எச்.ராஜா கண்டனம்

பாஜக ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, கார்த்திக் கோபிநாத் இணையம் மூலம் நிதி வசூலில் ஈடுபட்டுள்ளார்.

கடவுள் பெயர் சொல்லி ரூ50 லட்சம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில், கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், “திமுகவினர் கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்கு தமிழக பா.ஜ.க துணை நிற்கும். அவரின் அப்பாவிடம் அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்” பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், கார்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார்.

கார்த்திக் கோபிநாத் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது அவரை சந்தித்த புகைப்படங்கள், பிறந்தநாளின் போது அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷெர் செய்துள்ளார்.

கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.