கொழும்பு : இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவியாக அனுப்பிய அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அந்நாட்டு மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கி உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா கடனுதவி அளித்துள்ளதுடன் அரிசி, கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மருத்துவ பொருட்களையும் அனுப்பி வைத்தது.இந்தப் பொருட்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளதாக இலங்கை உணவுக் கழகம் தெரிவித்துள்ளது
இது பற்றி இலங்கை அதிகாரிகள் கூறுகையில் ‘இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்களை 25 மாவட்டங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு பிரித்து வழங்கும் பணி துவங்கியுள்ளது. ஏழை குடும்பம் ஒன்றுக்கு தலா 10 கிலோ அரிசி அடங்கிய பாக்கெட் வழங்கப்படுகிறது’ என்றனர்.
அதிகாரம் குறையும்:
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று கூறியதாவது:
இலங்கையில் பார்லிமென்டை விட அதிபருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டம் உள்ளது. அதிபரின்அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்த மசோதா விரைவில் பார்லி.யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் நாட்டில் தற்போது நிலவும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement