சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டதை தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஜூன் – 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழகக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள். குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திருச்சி கிழக்குசட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில் மற்றும் மாநில,மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM