“நான் ஒரு இந்து என்பதைப் பெருமையாகச் சொல்வேன்; ஆனால் நான் முட்டாளல்ல!" – காங்கிரஸ் தலைவர் கமல்நாத்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், “நான் ஒரு இந்து என்பதைப் பெருமையாகச் சொல்வேன், ஆனால் நான் முட்டாளல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

மாநில அளவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கமல்நாத், “காங்கிரஸின் அரசியல் பா.ஜ.க-வைப் போல மதத்தின் அடிப்படையில் இல்லை. நான் ஒரு இந்து என்பதைப் பெருமையாகச் சொல்வேன். ஆனால் நான் முட்டாளல்ல. மதத்தை நாங்கள் அரசியலின் அடிப்படையாகக் கருதவில்லை.

பா.ஜ.க

மதத்தை ஒரு நிகழ்வாகவும் நாங்கள் ஆக்கவில்லை. எங்களின் மதம் என்பது குடும்பத்தின் நிகழ்வு, அரசியல் நிகழ்வல்ல அது. 2013-14-ல் அவர்களின் (பா.ஜ.க) அஜெண்டாவானது, இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு 50 சதவிகித உற்பத்தியில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதாகவே இருந்தது. ஆனால், 2019-ல் அவர்களின் அஜெண்டா தேசியவாதத்துக்கு மாறிவிட்டது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.