மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் 20,500% வரையில் லாபம்.. முத்தான 5 பங்குகள். உங்களிடம் இருக்கா?

கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியாவில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல புதிய திட்டங்கள் அரங்கேறியுள்ளன. பற்பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜிஎஸ்டி, திவால் நிலை குறியீடு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேக் இன் இந்தியா என பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது இந்தியாவின் வணிக நடவடிக்கைகளில் பெரியளவிலான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் , பங்கு சந்தைகளும் அதற்கேற்ப மாற்றம் கண்டுள்ளது.

மோடி சென்னை பயணத்தில் துவங்கப்படும் 11 திட்டம் என்னென்ன.. முழு விபரம்..!

மல்டிபேக்கர் பங்குகள்

மல்டிபேக்கர் பங்குகள்

இந்த 8 ஆண்டுகால ஆட்சியில் 260 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறியுள்ளன. இதில் கிட்டதட்ட 30 பங்குகள் 1000% மேலாக ஏற்றம் கண்டுள்ளன. எனினும் சுமார் 20 பங்குகள் 50 – 90% வரையில் வீழ்ச்சி கண்டுள்ளன.
இந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சிறப்பான வருமானத்தினை கொடுத்த பங்குகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

 தன்லா பிளார்ட்பார்ம்ஸ்

தன்லா பிளார்ட்பார்ம்ஸ்

தன்லா பிளார்ட்பார்ம்ஸ் பங்கினை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். வாங்கியும் இருக்கலாம். இப்பங்கின் விலையானது கடந்த 8 ஆண்டுகளில் 20,500% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது 6.60 ரூபாயில் இருந்து, 1357.90 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனம் வங்கிகளுக்கு டெக் சப்போர்ட் அளிக்கும் சேவையினை செய்து வருகின்றது. கடந்த 8 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி மிகப்பெரியளவில் இருந்த நிலையில், நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

பாலாஜி அமின்ஸ்
 

பாலாஜி அமின்ஸ்

பாலாஜி அமின்ஸ் மல்டிபேக்கர் பங்கு விலையானது 49.50 ரூபாயில் இருந்து 2990 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இது சுமார் 5950% ஏற்றம் கண்டுள்ளது. இது சீன கெமிக்கல் நிறுவனங்கள் மூடலால் பலன் அடைந்துள்ளன. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளது.

மிண்டா இண்டஸ்ட்ரீஸ்

மிண்டா இண்டஸ்ட்ரீஸ்

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது ஆட்டோமேட்டிவ் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இப்பங்கானது 16.50 ரூபாயில் இருந்து, 937.80 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 5600% ஏற்றம் காண்டுள்ளது. இப்பங்கினில் கணிசமான அன்னிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்த நிலையில்,இப்பங்கானது ஏற்றம் கண்டுள்ளது.

நவீன் புளோரின்

நவீன் புளோரின்

நவீன் புளோரின் நிறுவனமும் கெமிக்கல் துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இப்பங்கின் விலையானது 82 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 3895 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 4650% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது குளிர்பதன பொருட்கள் மற்றும் ப்ளூரைடுகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது. அதன் விலையானது சர்வதேச சந்தையில் சாதனை அளவினை எட்டியுள்ளது. இது நிறுவனத்திற்கு லாபத்தினையும் அளிக்கிறது.

அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

இந்த மல்டிபேக்கர் பங்கும் ஒரு கெமிக்கல் நிறுவனமாகும். இப்பங்கின் விலையானது 78.50 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 3036 ரூபாய் என்ற லெவலுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 3800% ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் கெமிக்கல் சந்தையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These 5 multibagger stocks up to 20,500% return in 8 years of Modi government: do you have these stocks?

Five stocks including Tanla Platforms and Alkyl Amin Chemicals, have risen up to 20,500% in the past eight years amid Prime Minister Modi-led government action.

Story first published: Monday, May 30, 2022, 14:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.