அதிமுகவின் எம்எல்ஏவுக்கு முக்கிய பதவி வழங்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும், சேலம் புறநகர் மாவட்டம் சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் R. இளங்கோவன், (இவர் ஏற்கெனவே வகித்து வரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.)
ஓமலூர் மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் R. மணி, எம்.எல்.ஏ., இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் பொறுப்பில்
R. மணி, B.A., B.L., M.L.A., (ஓமலூர் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளனர்.