இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்கள் அடுத்தடுத்து வாரிசு கைகளுக்கு மாறி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிவிஎஸ் குழுமங்களின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பைத் தங்களது மகன் மற்றும் மகளுக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது ஹெச்சிஎல் ஷிவ் நாடார் என்றால் மிகையில்லை.
இதைத் தொடர்ந்து தற்போது நாட்டின் மிக முக்கியமான தனியார் வங்கியாக விளங்கும் கோடாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகம் வாரிசு கைக்குக் கொடுக்க உதய் கோடாக் திட்டமிட்டு உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளின் சிஇஓ அதிகப்படியாக 15 வருடம் மட்டுமே சிஇஓ பதவியில் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இந்நிலையில் கோடாக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ-வாக உதய் கோடாக் சுமார் 18 வருடமாக உள்ளார்.
உதய் கோடாக்
சமீபத்தில் உதய் கோடாக் அவர்களுக்கு அளிக்கப்பட்ட 3 வருட பதவி நீட்டிப்பு டிசம்பர் 2023 உடன் முடிவடையும் நிலையில், அடுத்தச் சிஇஓ பதவியில் உட்காரபோவது இவ்வங்கியின் நிர்வாகத் தலைவரான கேவிஎஸ் மணியன் தான் பலரும் கணித்திருந்த நிலையில், சமீபத்தில் பல முக்கியமான இடத்தில் உதய் கோடாக்-ன் மூத்த மகன் ஜெய் கோடாக்-கிறகு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெய் கோடாக்
கோடாக் மஹிந்திரா வங்கியின் நவம்பர் மாதம் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில் ஜெய் கோடாக் பங்குபெற்றது மட்டும் அல்லாமல் வங்கியின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் ப்ராடெக்ட்-ஆன 811-ன் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விளக்கம் கொடுத்தது மூலம் உதய் கோடாக் தனது மகன் ஜெய் கோடாக்-ஐ வங்கி துறையில் பல வருடம் அனுபவம் கொண்ட கேவிஎஸ் மணியன் கீழ் தலைமை பொறுப்புக்கு வடிவமைத்து உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கோடாக் மஹிந்திரா வங்கி
சமீபத்தில் கோடாக் மஹிந்திரா வங்கியில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் முக்கியமான மாற்றங்கள் நடந்தது. இதில் ரீடைல் வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வந்த சாந்தி ஏகாம்பரம் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். மேலும் சில முக்கியமான நிர்வாகக் கூட்டத்தைச் சமீபத்தில் ஜெய் கோடாக் தலைமையேற்று நடத்தியது மூலம் விரைவில் இவரை நிர்வாகம் சிஇஓ-வாக அறிவிக்கும் எனக் கணிப்புச் சந்தையில் நிலவுகிறது.
ஹார்வர்ட் பட்டதாரியான உதய் கோடாக்
உதய் கோடாக்-னண் மூத்த மகனான ஜெய் கோட்டா கடந்த 5 வருடமாகக் கோடாக் மஹிந்திரா வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த ஜெய் கோடாக் மெக்கன்சி அண்ட் கோ மற்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
புதிய சிஇஓ யார்..?
இன்றைய வர்த்தகத்தில் கோடாக் மஹிந்திரா வங்கி பங்குகள் 2.08 சதவீதம் சரிந்து 1905.85 புள்ளிகளை அடைந்துள்ளது. கோடாக் மஹிந்திரா வங்கியின் புதிய சிஇஓ-வாக உதய் கோடாக்-ன் மகன் ஜெய் கோடாக் நியமிப்பது சரியா..? இல்லை நீண்ட காலம் வங்கியின் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் கேவிஎஸ் மணியன் நியமிப்பது சரியா..? உங்கள் பதிலை கமெண்ட் பண்ணுங்க.
Is Uday Kotak’s elder son Jay Kotak will be new CEO of Kotak Mahindra Bank?
Is Uday Kotak’s elder son Jay Kotak will be new CEO of Kotak Mahindra Bank? வாரிசு கைக்கு மாறும் கோடாக் மஹிந்திரா வங்கி..!