புதிய எஞ்சின்; புதிய டிசைன்; மீண்டும் அம்பாஸடர்… அதுவும் சென்னையில்!

The Ambassador is one of the oldest favorite cars in India. It is currently being re-manufactured at the Hindustan Motors plant in Chennai: அம்பாஸடர் கார் குறித்து எந்த அறிமுகமும் தேவையில்லை. அந்த அளவிற்கு உலகப் புகழ் பெற்ற கார் வகைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய தாத்தா காலத்தில் ஒரு அம்பாஸடர் கார் வைத்திருந்தால் போதும். அவர்தான் அந்த ஊரின் பெரிய ஆளாக இருப்பார். மேலும், அந்த ஊரின் அடையாளமாகவும் அவர்தான் இருப்பார். இப்படியாக பெயரையும் புகழையும் சம்பாதித்த அம்பாஸடர் கார், சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட மற்ற கார்கள் கொடுத்த போட்டியால் அதன் பொலிவையும், மார்க்கெட்டையும் இழந்தது.

மேலும், கடந்த 1958ல் தொடங்கிய இதன் உற்பத்தியும் விற்பனையும், 2014ல் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அம்பாஸடருக்கு இணையாக அப்போது சந்தைப்படுத்தப்ட்ட மற்ற கார்கள் மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜிகளை உள்ளடக்கியவைகளாக இருந்ததே, அம்பாஸடரின் சரிவுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதிய எஞ்சின்; புதிய டிசைன் – சென்னையில் உற்பத்தி…

இந்நிலையில், தற்போது அம்பாஸடர் பிராண்டை வாங்கியுள்ள புயூஜியோ மற்றும் ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் இந்த காரை மீண்டும் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்பாஸடர் கார் புதிய உருமாற்றம் பெற்று அம்பாஸடர் 2.0 ஆக தயாரிக்கப்பட உள்ளது. இன்றைய் தலைமுறையினருக்கு ஏற்றவாறு, புதிய தொழில் நுட்பங்களுடன் இந்த கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த புதிய கார் உற்பத்தியானது சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் தயாரிக்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த ஆலையாகது சிகே பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் போஸ், புதிய அம்பாசிடர் கார்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய காரின் இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகள் மேம்படத் தொடங்கியுள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான சிகே பிர்லா குழுமம், அதன் கார் பிராண்டை 80 கோடி ரூபாய்க்கு பிரெஞ்சு கார் பிராண்டான பியூஜியோட்டிற்கு 2017ம் ஆண்டில் விற்பனைச் செய்தது. தற்போது இந்த நிறுவனங்களின் கூட்டணி மூலம் அம்பாஸடர் 2.0 புத்துயிர் பெற இருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.