டெலிகாம் துறையில் திடீரென உருவான வேலைவாய்ப்புகள்.. 2 மடங்கு வளர்ச்சியாம்..!

இந்திய வேலைவாய்ப்பு சந்தை கடந்த சில மாதங்களாக அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் அதிகப்படியான கடன் சுமை, வர்த்தகப் பாதிப்புகள் நிறைந்த டெலிகாம் துறையில் திடீரென அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 2 மடங்கு வளர்ச்சி அடையும் என வெளியாகியுள்ளது நம்பிக்கையை அளித்துள்ளது.

டெலிகாம் துறை

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையிலும், டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவும் தயாராகி வரும் நிலையில் டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

38000 ஊழியர்கள்

38000 ஊழியர்கள்

இதன் மூலம் டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் (2023) இரண்டு மடங்கு அதிகரித்து 38000 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெலிகாம் சேவை துறை சார்ந்த திறன் கொண்டவர்களுக்குத் தற்போது அதிகளவிலான டிமாண்ட் இருப்பதாக HR மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

 முக்கியப் பணிகள்
 

முக்கியப் பணிகள்

தற்போது நெட்வொக் இன்ஜினியரிங், நெட்வொர்க் ஆப்ரேஷன்ஸ், டேட்டா அனலிட்டிக்ஸ், ஆட்டோமேஷன் பிரிவை சார்ந்த ஊழியர்களுக்குத் தற்போது அதிகப்படியான டிமாண்டு இருப்பதாகத் தெரிகிறது. மேலும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தற்போது டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறது.

முக்கியத் தொழில்நுட்பங்கள்

முக்கியத் தொழில்நுட்பங்கள்

இதனால் செயற்கை நுண்ணறிவு, IoT, 5ஜி, டேட்டா அனலிட்டிக்ஸ், எட்ஜ் கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற துறையிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இத்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் தற்போது டெலிகாம் துறையில் உருவாகியுள்ளது.

டெலிகாம் துறை வேலைவாய்ப்பு

டெலிகாம் துறை வேலைவாய்ப்பு

இந்திய டெலிகாம் துறை 2020ஆம் நிதியாண்டில் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் விகிதம் 13 சதவீதமாக இருந்த நிலையில், 2021ல் 1 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து 2022ஆம் நிதியாண்டில் 29 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் டெலிகாம் ஊழியர்கள் எண்ணிக்கை 38000 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Telecom Sector hiring may doubling to 38k in FY23 as 5G launch

Telecom Sector companies may hiring more people in current fisical, Telecom cos ready to launch 5G services in India may doubling the job opening to 38000 FY23

Story first published: Monday, May 30, 2022, 15:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.