உலக அளவில் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மில் முன்னணியில் இருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ, பாலிவுட்டின் பிரபல திரைப்பட நிறுவனமான நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பல திரைப்படங்களில் அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.
பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த முயற்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றாலை மின்சார உற்பத்தியில் உலக நாடுகளுடன் போட்டி போடும் தமிழ்நாடு!
அமேசான் ப்ரைம் வீடியோ
இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் இந்த ஓடிடி தளத்தில் நேரடியாக ஒரு சில திரைப்படங்களும், திரையரங்குகளில் வெளியான பல திரைப்படங்களும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட்
இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி திரைப்பட நிறுவனமான நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் திரைப்படங்களை அமேசான் நிறுவனத்தில் திரையிடுவதற்கான உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பாலிவுட் திரைப்படங்கள்
கடந்த 1992ம் ஆண்டு முதல் தர்மேந்திரா, சுனில் ஷெட்டி, சல்மான்கான், அக்ஷய்குமார், ரன்பீர் கபூர் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’83 திரைப்படம் இந்நிறுவனத்தின் தயாரிப்புதான் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்துடன் நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நிறுவனத்தின் ஒருசில திரைப்படங்கள் வாடகை முறையிலும் பல திரைப்படங்கள் இலவசமாகவும் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
ரசிகர்கள்
இது குறித்து நதியாட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் சஜித் நதியத்வாலா கூறிய போது, ‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது திரைப்படங்கள் உலகளாவிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த கூட்டணி ரசிகர்களுடன் பயணிக்க உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். கதை சொல்லும் திறமை தற்போது வித்தியாசமாக மாறியுள்ள நிலையில் அந்த கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பிளாட்பாரமும் வேறுபட்டதாக உள்ளது. எனவே எங்கள் நிறுவனத்திற்கும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
ஓடிடி பிளாட்பார்ம்
இந்த நிலையில் ஓடிடி பிளாட்பாரத்தை பொருத்தவரை இந்தியாவில் மிகப்பெரிய பணமழை கொட்டும் துறையாக உள்ளது. இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றின்படி 2019 ஆம் ஆண்டில் ரூ.1900 கோடிகளுக்கு ஓடிடி பிளாட்பாரத்தில் வர்த்தகமாகியுள்ளது. அது 2020 ஆம் ஆண்டில் ரூபாய் 4 ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ரூ.4800 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Amazon Prime Video signs multi-film licensing deal with Nadiadwala Grandson Entertainment
Amazon Prime Video signs multi-film licensing deal with Nadiadwala Grandson Entertainment | NGE நிறுவனத்துடன் அமேசான் ப்ரைம் வீடியோ ஒப்பந்தம்: என்னென்ன திரைப்படங்கள் வெளிவரும் தெரியுமா?