பேருந்தில் சேட்டை போதை ஆசாமியை ஏறிமிதித்த தைரிய லட்சுமி..!

பேருந்துக்குள் போதையில்  சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக  நின்று நெஞ்சிலே ஏறி மிதித்த சிங்க பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது…

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள படிஞ்ஞாறு துறை பகுதியில் இருந்து வேங்கபள்ளி என்னும் பகுதிக்கு செல்ல இருந்த தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் பயணித்துள்ளார். பேருந்து புறப்படும் நேரத்தில் இவர் அருகில் 45 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி ஒருவர் வந்து அமர்ந்ததாக கூறப்படுகின்றது. பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாத ஆத்திரத்தில் அந்த பெண் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்க, பேருந்தை நிறுத்தி அவனை இறக்கி விட்டுள்ளனர்.

இறக்கி விட்ட பின்பும் அடங்காத அவன் சாலையில் படுத்தபடி அந்த பெண்ணை நோக்கி சில ஆபாச சைகளை காட்டியதால் ஆவேசமடைந்த சந்தியா தனி ஆளாக வந்து நடுரோட்டில் வைத்து அவனை ஏறி மிதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போதை ஆசாமியை ஏறி மிதிக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தைரிய லட்சுமி சந்தியாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.