'பிரேமம்' ஆண்டு விழாவைக் கொண்டாடிய அனுபமா பரமேஸ்வரன்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் 2015ம் ஆண்டில் வெளிவந்த படம் 'பிரேமம்'. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. மலையாள மொழியிலே தமிழகத்திலும் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் நடித்த சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் அதன்பின் மற்ற மொழிகளிலும் நல்ல வாய்ப்புகளைப் பெற்றனர். இப்படத்தில் நிவின் பாலியின் காதலியாக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அவரது சுருள் சுருளான ஹேர்ஸ்டைலுக்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ரசிகர்களானார்கள்.
இப்படம் வெளிவந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு அப்படத்தின் கதாபாத்திரப் புகைப்படங்களைப் பகிர்ந்து நினைவு கூர்ந்திருந்தார் அனுபமா. மற்றொரு கதாநாயகியான மடோனாவும் படத்தின் இயக்குனர் டைட்டில் கார்டை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.