வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: பெண் வேடமிட்டு வந்த இளைஞர் ஒருவர், உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் மீது கேக்கை வீசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாலியின் புகழ் பெற்ற ஓவியர் லியானர்டோ டாவின்சி. அவரது மோனலிசா உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இன்றும் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. அவற்றில் மோனலிசா ஓவியத்தில் அதன் புன்னகை, உலகை இன்றும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.அதற்கு காரணம், அந்த ஓவியத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் போது அது புன்னகைப்பதாகத் தெரியாது. ஆனால் சற்றே ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.
தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லார்வி மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அங்கு வீல் சேரில் வந்த மூதாட்டி ஒருவர் ஓவியத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தார். திடீரென எகிறி குதித்து ஓவியத்தின் அருகே சென்ற அவர், ஓவியத்தின் கண்ணாடியை உடைக்க முயன்றார். ஓவியத்தை பாதுகாக்கும் கண்ணாடி, குண்டு துளைக்க முடியாத கண்ணாடி என்பதால், ஓவியத்தை சேதப்படுத்த அவரால் முடியவில்லை. இதனையடுத்து, தனது பாக்கெட்டிலிருந்து கேக் ஒன்றை எடுத்து, ஓவியத்தின் மீது வீசினார். கண்ணாடியை உடைத்து ஓவியத்தின் மீது கேக்கை அப்பவே, அவர் இம்முயற்சியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சுதாகரித்து கொண்ட போலீசார், அந்த மூதாட்டியை சுற்றி வளைத்தனர். அவரை சோதித்ததில், அவர் பெண் இல்லை; பெண் வேடமிட்டு வந்த இளைஞர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement