கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகன (SUV) தயாரிப்பு நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை வாங்கவில்லை எனில் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனங்களின் வெற்றியை பார்த்து வியந்து போன சீன கிரேட் வால் மோட்டார்ஸ் ஆசை ஆசையாய் இந்திய வந்தது.
ஆனால் இன்றளவும் ஒரு செங்கல் கூட வைக்க முடியாமல் தவித்து வருகிறது.
ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..!
கிரேட் வால் மோட்டார்ஸ்
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் தனது வாகனங்களை அறிமுகம் செய்த சூட்டோடு கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறங்க 2017ல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை கைப்பற்ற ஒப்பந்தம் செய்தது.
ஜெனரல் மோட்டார்ஸ்
மகாரஷ்டிராவில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையைக் கைப்பற்றுவதோடு இந்தியாவில் 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய திட்டமிட்ட கிரேட் வால் மோட்டார்ஸ்-ன் கைப்பற்றலுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கமால் உள்ளது.
இந்தியா – சீனா பிரச்சனை
இந்தியா – சீனா மத்தியிலான பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போதும் இந்திய அரசு சீன நிறுவனங்களை குறிவைத்துப் பல கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்த நிலையில் இன்றளவும் பல சீன முதலீடுகளுக்குப் பெரிய அளவில் அனுமதி அளிக்காமல் மத்திய அரசு உள்ளது.
இரண்டு முறை நீட்டிப்பு
இந்த நேரத்தில் வந்த கிரேட் வால் மோட்டார்ஸ் ஒப்புதல் பெற முடியாமல் சிக்கியுள்ளது. இத்தொழிற்சாலை கைப்பற்றுவதற்கான இறுதி நாள்-ஐ இரண்டு முறை நீட்டிப்பு செய்யப்பட்ட பின்பும் முடிவுக்கு வரவில்லை.
இந்தியாவுக்கு பை பை
இந்த நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கைப்பற்ற முடியவில்லை எனில் தனது இந்திய திட்டத்தில் வெளியேறுவது குறித்து முடிவெடுக்க என கிரேட் வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல்
ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, பியாட் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகியவை 2017 ஆம் ஆண்டு முதல் நஷ்டம் அல்லது வர்த்தகத்தைப் பெறத் தவறியதால் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது. ஆனால் கிரேட் வால் மோட்டார்ஸ் வர்த்தகத்தையும், உற்பத்தியையும் துவங்குவதற்கு முன்பாகவே வெளியற்ற முடிவு செய்துள்ளது.
China’s Great Wall Motors may exit from India plans if GM plant not sorted out june 2022
China’s Great Wall Motors may exit from India plans if GM plant not sorted out june 2022 ஜூன் மாதம் கெடு விதித்த சீனா-வின் கிரேட் வால் மோட்டார்ஸ்.. டீலா..? நோ டீலா..?