2022 சனி வக்ர பெயர்ச்சி! இந்த நான்கு ராசிக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகுதாம்



சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். 

கும்ப ராசியில் பயணிக்கும் சனி 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.

சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது சனி வக்ர பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம். 

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்கள் விருப்பங்கள் ஏதாவது நிறைவேறாமல் இருந்தால், இக்காலத்தில் அது நிச்சயம் நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

இக்காலத்தில் நற்செய்திகளையும் பெறுவீர்கள். முக்கியமாக விருச்சிக ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களின் சுகபோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்பட்டு வந்திருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். போட்டித் தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவார்கள். தொழிலில் சில நற்செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. முக்கியமாக உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.