தியேட்டரில் படம் : நதியாவின் 36 ஆண்டு மலரும் நினைவுகள்
1986ம் ஆண்டு டாம் குரூஸ் நடித்த டாப்கன் என்ற படம் வெளியானது. 15 மில்லியன் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 357 மில்லியன் வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகை நதியா ஒரு திரையரங்கில் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது டாப்கன் படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன். இப்போது 36 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் முதல் பாகத்தை பார்த்த அந்த மலரும் நினைவுகள் தற்போது என் மனதில் தோன்றுகின்றன என்று தெரிவித்துள்ளார்.