இந்திய கடற்படையின் பரிந்துரையின் அடிப்படையில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலிலிருந்து இயக்குவதற்காக 26 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், தற்போது கடலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அந்த கப்பல் பிரதமர் மோடியால் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறினார்.
இந்நிலையில், அந்த கப்பலுக்காக பிரான்சின் டசால்ட் அல்லது அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்களை நேரடியாக வாங்க திட்டமிடுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.