கதவுகள் பூட்டிய நிலையில் சென்னையில் உள்ள மசாஜ் மையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட தடை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
சென்னையில் உள்ள மசாஜ் சென்டர்கள் அழகு நிலையங்களுக்கு இருபத்தி ஏழு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில்,
மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
ஒருவருக்கு சேவை வழங்கிய பின் கைகள் மற்றும் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்
பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது
பாலியல் தொடர்பான சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கதவுகள் பூட்டிய நிலையில் மசாஜ் மையங்கள் செயல்பட தடை உள்ளிட்ட இருபத்தி ஏழு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.