நீதிமன்ற அவமதிப்பா? எம்.பி., விளக்கம்| Dinamalar

கோல்கட்டா: ”நீதிபதியையோ அல்லது குறிப்பிட்ட நீதிமன்ற தீர்ப்பையோ நான் விமர்சிக்கவில்லை,” என, மேற்கு வங்க எம்.பி., அபிஷேக் பானர்ஜி விளக்கம் அளித்து உள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இம்மாநில எம்.பி.,யும், முதல்வரின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘நீதிபதிகளில் 1 சதவீதத்தினர் அனைத்து வழக்கிலும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுகின்றனர்’ என, தெரிவித்தார்.அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஜக்தீப் தன்கர்அறிவுறுத்தினார். அபிஷேக் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் நேற்று கோரப்பட்டது. இதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அபிஷேக் பானர்ஜி அளித்துள்ள விளக்கத்தில், ”எந்தவொரு நீதிபதியின் பெயரையோ, தீர்ப்பையோ குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. 1 சதவீதத்தினர் என்றே கூறினேன். இவர்கள் எல்லா துறையிலும் உள்ளனர்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.