ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அரசுப் படையினருக்கும், பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையினால், வாழ்வாதாரம் இழந்த மக்கள் உணவு, குடிநீரின் கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அண்டை நாடான உகண்டாவில் 7 ஆயிரம் பேர் புகலிடம் கேட்டும் தஞ்சமடைந்துள்ளனர்.