திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரந்தசிந்தலாவில் உள்ள வட்டரபாவி கிராமத்தை சேர்ந்த 38 பேர் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை லோடு வேனில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நள்ளிரவு 11.50 மணியளவில் திரும்பி கொண்டிருந்தபோது, வட்டரபாவி கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பக்தர்கள் வேன் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நாராயண கோட்டம்மா(65), கோட்டம்மா(70), புலிபாடு கோட்டேஸ்வரம்மா(55), மக்கென வெங்கடரமணா(40), லட்சுமிநாராயணா(35), குருசெட்டி ரமாதேவி(50), கனலாபத்மா(40) ஆகிய 7 பேர் இறந்தனர். படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.