புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(44). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றினார். நேற்று காலை இவர் சென்னை மூலக்கடையில் இருந்து பைக்கில் தனது வீட்டுக்கு சென்றார். புழல் மத்திய சிறைச்சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.