தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம்: அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 5 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வருடம் கேரளாவில் கோடைமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்து உள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 28 வரை 98% கூடுதலாக கோடை மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் மழையின் தீவிரம் சற்று குறைவாக இருந்தாலும், ஜூன் 2வது வாரத்திற்கு பிறகு மழை தீவிரம் அதிகரிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.