பார்ட்டிகேட் தொடர்பான சூ கிரேவின் விசாரணை அறிக்கைகள் வெளியானதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் இளம் எம்.பி எலியட் கோல்பர்ன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாள் கொண்டங்களில் ஈடுப்பட்டது பெரும் சர்ச்சையானது மற்றும் அதற்கான அபராதங்களும் அவருக்கு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா காலத்தில் மீறப்பட்ட விதிமுறைகள் குறித்த சூ கிரே தலைமையிலான பார்ட்டிகேட் விசாரணை அறிக்கைகள் வெளியானதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என டோரி எம்.பி எலியட் கோல்பர்ன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவரது உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில், சூ கிரே அறிக்கையிலோ அல்லது மெட் பொலிஸாரின் விசாரணையிலோ பிரதமர் பதவி விலக வேண்டும் என 1922 கமிட்டிக்கு சமர்ப்பிக்கும் என்னுடைய கடிதம் தொடர்பான முந்தைய கருத்து தவறானது என எதுவும் நம்ப வைக்கவில்லை என தெரிவித்தார்.
கன்சர்வேட் கட்சியின் இளம் எம்.பி மற்றும் 26வது டோரியான எலியட் கோல்பர்ன், பார்ட்டிகேட் தொடர்பாக பிரமருக்கு அபராதம் விதிக்கபட்ட பிப்ரவரி தொடக்கத்திலேயே பதவி விலக வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் 25வது டோரி எம்.பியான ஜெர்மி ரைட்டும், விதிமுறைகளை மீறியதற்காக மெட் பொலிஸாரின் அபராதத்தில் சிக்கியதால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: எனது ஆடைகளை விற்றாவது..! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிமொழி
மேலும் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், மன்னிப்பு மற்றும் அரசு ஊழியர்களை நகர்த்துவதை விட அதிகமாக தேவைப்படும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.