#சேலம் || காதல் மனைவிக்காக ஊர் ஊராக நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது.!

சேலம் காதல் மனைவிக்காக பல ஊர்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞரையும் அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி சேலம் சூரமங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் நகையை இரண்டு நபர்கள் பறித்து சென்றனர். 

இது குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே வாகன தணிக்கையின் போது வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு நபர்களும் சூரமங்கலம் நகைபரிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், ஆடம்பரமாக செலவு செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இதுபோல் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் ஒருவர் தனது காதல் மனைவிக்காக வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.