சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக, தமிழக காவல்துறையினருக்கு எதிராக தனலட்சுமி என்ற பெண், மாநில உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த புகாரில் மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
மேலும், பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சமூகத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயலாத மக்களிடம் போலீசார் அதிகாரத்தை காட்டக்கூடாது என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.