சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘ககன்யான்’ திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு, அவர்கள் செல்லும் விண்கலனில் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். அசாதாரணமான சூழலில் அவர்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். அதனால் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் விண்கலத்தை தரமாக, நம்பகத்தன்மையுடன் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு வெற்றிகரமான, மனிதனை அனுப்பும் விண்கலத்தை உருவாக்க, நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்த விண்கலத்தை உருவாக்குவது தொடர்பாக இஸ்ரோ பொறியாளர்கள், மருத்துவர்கள் இடையே கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன.