உக்ரைன் போருக்குப் பிறகு முழு உலகமும் தங்களின் டிரோன் தயாரிப்புக்கு வாடிக்கையாளராக மாறி விடும் என்று துருக்கி டிரோன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவக் கூடிய வகையில் துருக்கி தயாரிப்பான Bayraktar TB2 வான்வழி டிரோன்கள் ரஷ்ய பீரங்கிகள், கவச வாகனங்கள் முற்றிலுமாக அழித்தது.
இஸ்தான்புல்லைச் சேர்ந்த Bayraktar டிரோன் நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த TB2 ரக டிரோன்கள் 12மீட்டர் நீள இறக்கைகள் கொண்டது.
25ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே பறக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.