சென்னை சைத்தாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சொடலா அசோக் என்பவர் தனது நண்பரை சந்திக்க பெண் தோழியுடன் புறநகர் ரயிலில் சைத்தாப்பேட்டை சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் இருட்டில் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை தரமறுத்ததால் ஆந்திரமடைந்த அவர்கள் கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.