Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு.. போனஸ் மதிப்பெண்!
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் 5க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல், பகுதி -2, வினா எண் 29 க்கு விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Tamil News Latest Updates
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும். ஜூன் 3ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதுவரை திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ்- 1 என 6 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தால் ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 6 பேர் மட்டுமே தாக்கல் செய்தால் போட்டியின்றி 6 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
உதயநிதி வேண்டுகோள்!
எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை நன்கு அறியும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன்.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை சிந்தாரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது. மே 24 அன்று பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் இருவர் கைது.
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் வரும் கல்வியாண்டில் இடம்பெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் ஏற்காட்டில் 45ஆவது கோடைவிழா மலர் கண்காட்சியில் ரூ20 லட்சம் நுழைவு கட்டணம் வசூல். 6 நாள்களில் மலர் கண்காட்சியை 72,387 பேர் சுற்றி பார்த்துள்ள நிலையில், ரூ20 லட்சம் கட்டணமாக வசூல்
உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனா, ஜப்பான், பிரான்ஸ்-ஐ பின்னுக்கு தள்ளி 3 ஆம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 98 நாடுகளில் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 48,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் பாஜக பேரணி!.
சென்னை, வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மதுரையில் 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தும் நிலையில், 1,600 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி ‘சூப்பர் 4’ சுற்றின் இறுதி லீக் போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில், கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.
பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கலால் வரி குறைப்பால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கோரி, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம் செய்வதாக, விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
சென்னையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகம் நோக்கி இன்று பாஜக பேரணி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் – திருச்சி இடையே செல்லும் முன்பதிவில்லாத விரைவு ரயில்(06869) நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஏற்கனவே 12, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடுகிறார்.
இமாசலப் பிரதேசத்தில் ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சிம்லா செல்கிறார். அங்கு, பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தில் 11வது தவணையாக ரூ. 21 ஆயிரம் கோடி நிதியை பயனாளிகளுக்கு வழங்குகிறார். மத்திய அரசின் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.