அடை மழையானாலும், சுடும் வெயிலானாலும்
திருப்பதி
ஏழுமலையானை தரிசிக்க திரளும் கூட்டம் குறைவதே இல்லை. கோடை விடுமுறை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது திருமலையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டமாய் காட்சியளிக்கின்றன.
அதிலும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. எனவே அந்த நாட்களில் ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசன முறைகளை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில் 70 ஆயிரத்தை தொடுகிறது.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்,
பக்தர்கள்
கூட்டம் வெகுவாக அதிகரித்ததால், டிக்கெட் இல்லாமல்
தேவஸ்தானம்
திருமலைக்கு அனுப்பி வருகிறது.
உதயநிதி மூன்று நாள்களில் பதவியேற்பு? அறிக்கையில் சொல்லாமல் சொன்னது என்ன?
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி
திருமலை
வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 19 அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே, தர்ம தரிசனத்திற்கு ஏழு மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 – 3 மணி நேரமும் தேவைப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை 90 ஆயிரத்து 885 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். அன்றைய தினம் மட்டும் 35 ஆயிரத்து 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. தரிசன அனுமதியுள்ள பக்தர்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.