சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மறுசுழற்சி முறையில் பொருட்களைத் தயாரிக்க பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறது சிங்கப்பூர். அந்தவகையில் குடிப்பதற்கு இயலாத சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ‘நியூ வாட்டர் (Newater)’ என்ற பெயரில் குடிப்பதற்கு ஏதுவானகுடி தண்ணீராக மாற்றி வருகிறது சிங்கப்பூர். இந்த ‘நியூ வாட்டர்’ பாதுகாப்பான குடிநீரின் சர்வதேச தரத்தைக் கடைபிடிப்பது மட்டுமில்லாமல் ‘பீர் (beer)’ போன்ற மதுபானங்கள் தயாரிப்பதற்கு ஏதுவான நீர் என்று கூறப்படுகிறது. இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதுபானம் ‘Newbrew’ என்றழைக்கப்படுகிறது.
இந்த வகை மதுபானங்களை சிங்கப்பூரைச் சேர்ந்த ‘எஸ்போர்(S’pore)’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதை தயாரிப்பதால் இதனை ‘க்ரினஸ்ட் பீர்’ என்றழைக்கிறது இந்நிறுவனம். இதில் சுவாரஸ்யம் இந்த ‘நியூ வாட்டர்’ உடன் உயர்தரம் கொண்ட பொருட்களைச் சேர்த்து இந்த மதுபானத்தைத் தயாரிப்பதால் வழக்கமாக தயாரிக்கப்படும் மதுபானங்களில் என்ன சுவை உள்ளதோ அதே சுவை இந்த க்ரீனஸ்ட் பீரீலும் உள்ளதாகச் சொல்கிறார்கள்.